Map Graph

தேசிய இனக்குழுவியல் அருங்காட்சியகம் (யப்பான்)

யப்பானில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் ஆய்வுக் கழகம்

தேசிய இனக்குழுவியல் அருங்காட்சியகம் என்பது யப்பானில் உள்ள முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இது 1974 இல் நிறுவப்பட்டு 1977 இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இது மனுடவியல் மற்றும் சமூக அறிவியல் கல்வித் துறைகளில் யப்பானின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனமாக உள்ளது. இது ஒசாகாவின் சூட்டாவில் எக்ஸ்போ '70 நடந்த மைதானத்தில் கட்டப்பட்டது. இது நிறுவப்பட்டபோது இருந்த சேகரிப்புகள் அட்டிக் சேகரிப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் யப்பானிய பொருட்களின் இன ஒப்பாய்வியல் தொகுப்பாகும். இதில் ஜோமோன் தொல்லியல் கலைப்பொருட்களின் சில ஆரம்ப கண்டுபிடிப்புகள் அடங்கும். 1977 ஆம் ஆண்டு திறப்பு விழாவிற்காக மேலும் சேகரிப்புகள் சேகரிக்கபட்டன. மேலும் சேகரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Read article
படிமம்:National_museum_of_ethnology_Japan.jpg